Advertisement

கூகுள் பிக்ஸல் 4 ஏ

Share

இதோ வருகிறது; அதோ வருகிறது என அதிகம் பேசப்பட்ட, 'கூகுள் பிக்ஸல் 4 ஏ' ஸ்மார்ட்போன், ஒருவழியாக அறிமுகமாகிவிட்டது. கூகுள் பிக்ஸல் 4 போனுடன் இதை ஒப்பிட்டால், ஒரு மாற்று குறைவு தான்.
இந்த போனில் முன்பக்கம், பின்பக்கம் ஆகிய இரு பக்கங்களிலும், சிங்கிள் கேமரா தான் உள்ளன. டைட்டன் எம் பாதுகாப்பு, 3.5மி.மீ., ஹெட்போன் ஜாக், பின்பக்க விரல் ரேகை சென்ஸார் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் விலை, 6 ஜி.பி., 128 ஜி.பி., மாடல் 26 ஆயிரத்து 300 ரூபாய்.
வரும், 20 தேதியிலிருந்து விற்பனைக்கு கிடைக்கும். 'ஜெட் பிளாக்' எனும் ஒரே ஒரு வண்ணத்தில் மட்டுமே வந்துள்ளது. பிக்ஸல் 4 ஏ மாடலில், 5ஜி வசதி கொண்டது, 37 ஆயிரத்து 600 ரூபாய் ஆகிறது. இதற்கும், பிக்ஸல் 5-5ஜி போனுக்கும் முன் பதிவு அக்டோபர் மாதத்தில் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement