Advertisement

வீ டூ லவ் சிறுவர்மலர்!

Share

என் வயது, 75; தமிழக அரசின் நில அளவை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். அமெரிக்காவில் வசிக்கும் என் பேத்திக்கு வயது, 6; தமிழ் பேச, எழுத சரியாக தெரியவில்லை. நான், மனைவியுடன், ஆறு மாதங்கள் அமெரிக்காவில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.
புறப்பட்டபோது, ஓர் ஆண்டில் வெளிவந்த, சிறுவர்மலர் புத்தகங்களை எடுத்துச் சென்றேன். அவற்றை பயன்படுத்தி, பேத்திக்கு தமிழ் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். படக்கதை, சிறுவர் போடும், 'புதிர்!' பகுதி ஆகியவை உதவியுடன் கற்றுக் கொடுத்தேன். எளிதாக கற்றுக் கொண்டாள்.
ஓவியம் வரையவும், சிறுகதைகள் படிக்கவும் ஆர்வமூட்டினேன். ஓரளவு பயற்சி பெற்று, படக்கதை வாசிக்கிறாள். 'புதிர்!' விடைகளை கண்டுபிடித்து எழுதுகிறாள்; ஓவியம் வரையவும் கற்றிருக்கிறாள். இதற்கு உறுதுணையாக இருந்த சிறுவர்மலர் இதழுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
- பி.ஜெயராஜ், சென்னை.
தொடர்புக்கு: 98400 73255

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement