Advertisement

சண்டை கோழிகள்!

Share

கோழிச்சண்டை கோகுல் என்றால், அந்த வட்டாரத்தில் பிரபலம். இரண்டு பலமிக்க கோழிகளே அவன் சொத்து. ஊர் ஊராகச் செல்வான். கோழிகளை மோத விட்டு சம்பாதிப்பான். ஊர் மக்களைக் கூட்டி, கோழி பந்தயமும் நடத்துவான். இவற்றில் கிடைத்த பணத்தில், சுகமாக வாழந்து வந்தான்!
ஒரு நாள் -
பக்கத்து ஊரில் கோழிச் சண்டை நிகழ்ச்சிக்கு போனான் கோகுல். அன்று திட்டமிட்டு கோழிகளுக்கு பயற்சி அளித்திருக்கவில்லை. பயிற்சி திருப்தியாக அமையாததால், இரண்டு கோழிகளும் தோற்றன; பந்தயமாக வைத்த பணம் எல்லாம் பறி போனது.
கடும் கோபத்தால், கோழிகளை துரத்தி அடித்துவிட்டு, அதிருப்தியடன் வீடு திரும்பினான் கோகுல்.
பக்கத்தில் இருந்த பண்ணைக்கு, அந்த கோழிகள் வந்தன; பண்ணையிலிருந்த கோழிகள், உறவு பாராட்டி அன்புடன் சேர்த்துக் கொண்டன. அங்கு நன்றாக உண்டு, உறங்கி ஓய்வெடுத்தன.
சில நாட்களுக்கு பின் -
சண்டைக் கோழிகளால், சும்மா இருக்க முடியவில்லை! பண்ணைக் கோழிகளை வம்புக்கு இழுத்து மோதலுக்கு அழைத்தன. அவை வரவில்லை! எனவே, தமக்கு தாமே மோதிக் கொண்டன; இந்த மோதலில் பண்ணைக் கோழிகளும் தாக்கப்பட்டன!
பண்ணை அமைதி இழந்தது. அங்கிருந்த கோழிகள் எல்லாம் திரண்டு, சண்டைக் கோழிகளை துரத்தி அடித்தன!
தங்கங்களே... சண்டை என்ற பண்பு சகலத்தையும் அழித்துவிடும். முடிந்த வரையில், அனைவருடனும் நட்பு பாராட்டி பழகுங்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement