Advertisement

'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்

Share

'முழுமையாக தாய்ப்பால் அருந்திய குழந்தைகளே நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வளர்கிறார்கள். குழந்தைகளை நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் முக்கிய தடுப்பூசி தாய்ப்பாலே' என்கிறார் சரண் மருத்துவமனையின் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு நிபுணர் மணிமேகலை.

தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் ஆக., முதல் வாரம் தாய்ப்பால் வார விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, போயம்பாளையம் சரண் மருத்துவமனையில் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

டாக்டர் மணிமேகலை கூறியதாவது:குழந்தைகள் பிறந்து ஒரு மணி நேரத்தில் இருந்து தாய்ப்பால் கொடுப்பது கட்டாயம். முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே பிரதான உணவாக இருக்க வேண்டும். அதன்பிறகு, 2 வயது வரை திட உணவோடு சேர்த்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதுவே குழந்தைகளுக்கான முக்கிய நோய்த்தடுப்பு அரண்.

குழந்தைகளுக்கு இரும்புச்சத்து, கால்சியம் சத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மூளை செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு மார்ப்பு மற்றும் சினைப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதில்லை. குழந்தை பிறந்ததும், தேன், சர்க்கரை தண்ணீர் கொடுக்க கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,இந்தியா

    நான் புட்டிப் பால்தான் குடித்து வளர்ந்தேன். அதை எப்போது வேண்டும் என்றாலும் குழந்தைகளுக்கு புகட்டலாமேஅந்த பசுவின்(நெசமாலுமே பசு பாலாக இருந்தால் மட்டுமே) பாலை உண்ட பசுவை மாதா என்று அந்த குழந்தைகள் வணங்குமே இடம் தேடி மூடி பால்கொடுக்கக வேண்டாமே சிக்னு இல்லாட்டி ,இந்த கொரான காலத்திலே,பூங்கோதே, கண்ணு ஒனக்கு பூ வாங்க போனேனா,போலீசுக்காரானுக புடிச்சு பக்கத்தூர் மருதங்குளத்திலே தள்ளிபோட்டாங்க. அங்கே, மச்சான் இந்த கொரானா காலத்திலே எனக்கு தொணையா இங்கே தங்கிகிடுங்க, நைனா மந்திரி கன்னக்கோல் கனக சபையோட ஆஸ்தான கண்டிராக்டருன்னா சரி ஆபத்துக்கு பாவம் இல்லேன்னு இங்கே தங்கிட்டேன். ஒனக்கும் ஒரு தங்கச்சி கெடைச்ச மாதிரி வச்சசுகிடேன்னா என்ன செய்யமுடியும் ஊர் நடப்பறிந்த புட்டிப் பால் பூங்கோதை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement