Advertisement

கால்நடைகளுக்கு பசுந்தீவனம்

Share

கால்நடை வளர்ப்பில் மொத்த செலவினத்தில் தீவன செலவு 35 - 60 சதவீதம் ஆகும். எனவே பொருளாதார ரீதியான பண்ணையத்திற்கு சிறப்பான முறையில் தீவனம் அளிப்பதே மிகவும் முக்கிய அம்சம். கால்நடைகளுக்கு அனைத்து சத்துக்களையும் கொண்ட சரிவிகித உணவை சரியான அளவில் வழங்க வேண்டும்.
பயிறு வகை தீவன பயிர்களில் அதிகளவில் புரதச்சத்து, வைட்டமின்கள், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், இவை கால்நடை தீவனத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தானியம் மற்றும் புல் வகை தீவன பயிர்களுடன் பயிறு வகை தீவன பயிர்களை மூன்றுக்கு ஒரு பங்கு கலந்து கொடுப்பதன் மூலம் தீவனத்தின் சுவை அதிகரிக்கிறது. கறவை மாடுகளின் பால் உற்பத்தி திறன் கூடுகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்ட தீவனத்தட்டைப்பயிறு 'கோ 9' ரகம் அனைத்து பருவங்களிலும் பயிரிட ஏற்றது. இந்த தீவன தட்டைப்பயிறை செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் மானாவாரியில் பயிரிடலாம். இறவை பயிராக ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதை போதுமானது.
ஐம்பது சதவீதம் செடிகள் பூத்தவுடன் பசுந் தீவனத்தை 50 - 55 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். விதைக்கு என்றால் 90 - 95 நாட்களில் அறுவடை செய்யலாம். ஒரு எக்டருக்கு 900 - 1000 டன் வரை விதை மகசூல் கிடைக்கும்.
குறைந்த வயதுள்ள சோளம், மக்காச்சோளத்துடன் கலந்து தீவனமாக பயிரிட ஏற்றது. இந்த தீவன தட்டைப்பயிறு குறைந்தளவில் நார்ச்சத்து கொண்டுள்ளது. அதிக சுவை மற்றும் கால்நடைகளின் செரிமானத்திற்கும் ஏற்றதாக உள்ளது.
இந்த ரகம் மஞ்சள் தேமல் நோயக்கு எதிர்ப்பு திறன் கொண்ட ரகமாகும். இந்த ரகம் அதிக பசுந்தீவன மகசூல் ஒரு எக்டேருக்கு 23 டன் வரை கொடுக்கக்கூடியதால் விவசாயிகள் தீவன தட்டைப்பயிறு கோ 9 ரகத்தை பயிரிட்டு பயன்பெறலாம்.

முனைவர் செல்வி இரமேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர்
முனைவர் கு.செல்வராணி, தொழில்நுட்ப வல்லுனர்,
வேளாண் அறிவியல் நிலையம், மதுரை.
97897 46456

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    நன்றி உங்கள் பதிவிற்கு .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement