Advertisement

நச்சுத்தாவரங்களால் ஏற்படும் நஷ்டம்

Share

கோ 3, கோ 4, ஆல், அகத்தி, பூவரசு, கருவேலான், குடைவேலான், முருங்கை, கிளைரி சிடியா என தாவரங்களில் கால்நடைகளுக்கு நன்மை தரக்கூடியவை இருந்தாலும், சில வகை தாவரங்கள் கால்நடைகளில் விஷத்தன்மையை உண்டாக்கி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. அவைகளை பற்றி விழிப்புணர்வு இருந்தால் இழப்புகளை தவிர்க்கலாம்.
நச்சுத்தன்மை கொண்ட தாவரங்களில் முதன்மையானது அரளி. வீடுகளில் அழகுக்காகவும், விவசாயிகள் மலர் சாகுபடியாக வயல்வெளிகளிலும் பயிடக்கூடிய இத்தாவரம் தமிழ்நாட்டில் இல்லாத இடமில்லை.

கால்நடைகளுக்கு கடுமையான வயிற்று போக்கினை உண்டாக்கும் அரளி இலைகள். மேலும் இருதயத்தினை செயல் இழக்கவும் வைக்கும். அரளி இலையைத்தின்ற கால்நடை களில் இரைப்பை மற்றும் குடல் பகுதிகள் பாதிப்பதால் வயிற்று கோளாறு ஏற்படுகின்றன. பல்வகை தாவரங்களை சாப்பிடும் ஆடுகள் கூட அரளி இலைகளை தின்னாது.

சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் விதைகள் கொண்ட குன்றிமணிச் செடியை கால்நடைகள் உண்ண நேர்ந்தால் வலிப்புடன் பக்கவாதம் ஏற்படுத்தும். செடியை சாப்பிட்ட ஆடு, மாடுகள் நிற்க முடியாமல் தள்ளாடும். நெய்வேலி காட்டாமணக்கு என்ற வகை செடிகளை சாப்பிடும் கால்நடை களுக்கு நரம்பு மண்டலம் பாதிப்புகள் உண்டாகும். கழிச்சல் நோயினால் கால்நடைகள் சுகவீனப்படும். இத்தாவரத்தை அதிகமாக உட்கொண்ட வெள்ளாடுகளில் இறப்பு தவிர்க்க முடியாதது.

நெய்வேலி காட்டாமணக்கை விவசாயிகள் பசுந்தாள் உரமாக பயன்படுத்துவார்கள். வறட்சிக் காலங்களில் இதன் இலைகள் சாப்பிட அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது. ஆமணக்கு, ஊமத்தை, எருக்கு போன்ற தாவரங்களும் கால்நடைகளுக்கு ஆகாது. இவற்றில் ஆமணக்கு விதைகளில் நச்சுத்தன்மையும் கொண்டவை. எருக்கின் பால் கண்ணில் பட்டால் பார்வை இழப்பையும், தோலில் பட்டால் அரிப்பையும் ஏற்படுத்தும். எருக்கினை சாப்பிடும் கால்நடை களுக்கு வலிப்பும், இறப்பும் ஏற்படும். கால்நடை வளர்ப்பாளர்கள் தாங்கள் வழங்கும் பசுந்தீவனங்களில் நச்சுத்தாவரங்களின் இலை தழைகள் கலப்பு இல்லாதபடி கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும்.

டாக்டர். வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.
94864 69044

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement