Advertisement

சோதனை மேல் சோதனை!

Share

பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து கலங்க வைக்கிறார், அவரது இளைய பேரன்.
ஹாரியின் மனைவி, மேஹன் மார்கல், 'அரச குடும்ப வாழ்க்கையே வேண்டாம். அமைதியான வாழ்க்கையே போதும்...' என்றதால், சமீபத்தில் ஓட்டம் பிடித்தனர், ஹாரியும், மேஹனும்.
இந்த அதிர்ச்சியிலிருந்து அரச குடும்பம் மீள்வதற்குள், அடுத்த அணு குண்டை வீசியுள்ளார், மேஹன்.
சமீபகாலமாக, அமெரிக்காவில், கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் மீது, கொடூரமான தாக்குதல்கள் நடக்கின்றன. இதை கண்டித்து, அமெரிக்கா மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டங்கள் நடக்கின்றன.
'இந்த நவீன காலத்திலும், இனவெறி நடப்பதை சகிக்க முடியவில்லை. அமெரிக்காவுக்கு சென்று, கறுப்பின மக்களுடன் சேர்ந்து, வீதியில் அமர்ந்து போராடப் போகிறேன்...' என்கிறார், மேஹன்.
ராணி எலிசபெத்தோ, 'அரச குடும்பத்துக்கு, இந்த பொண்ணு, கெட்ட பெயர் ஏற்படுத்தி விடும் போலிருக்கிறதே...' என, புலம்புகிறார்.
—ஜோல்னாபையன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Manian - Chennai,இந்தியா

    எதையும் சிந்தனை செய்து, குறைகள் உள்ள நடை முறைகளை மெதுவாக மாற்றம் செய்யாமல், எலி வரும் ஓட்டைகளை அடைக்க வழி தேடாமல் வீட்டை எரித்தவன் கதை இது. நார்சிசிஸட் (Narcissist) வியாதி உள்ளவள் இவள். காந்தி ஒருவராலேயே தீண்டாமை ஒழிந்துவிட்டதா?கருணா நாயுடு குமுக ஒரே ஜாதியாக தமிழர்களை மாற்றி விட்டதா? ஹாரி ஒரு தாயார் அன்பை நாடினார் . அதை மேகன் தந்தார், ஹாரிக்கு வழி காட்ட வில்லை. குறைகளே இல்லாத குடும்பமே இருக்க முடியாது . இருந்தால், உலகமே ஒரே அச்சில் வா்த்த பொம்மைகளாகி நடைப்பிணமாக திரிவார்கள். உப்பில்லா பண்டங்களேயே (இனிப்பையே) எப்போதும் தின்ன முடியுமா?

  • R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா

    மேஹன் கறுப்பின மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு போராடத்துணிந்ததற்கு பாராட்டு தெரிவித்திருக்கலாமே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement