Advertisement

மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!

Share

அமெரிக்காவைச் சேர்ந்தவர், பென்னி ஹர்லென். வித்தியாசமான சிகை அலங்காரத்துக்காக, அமெரிக்கா முழுதும், இவருக்கு ரசிகர்கள் உண்டு. தலையின் உச்சியில் அதிகமான முடியை வளர்த்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
தன் சிகை அழகை வைத்து, 'மாடலிங்' துறையிலும் இப்போது அதிகம் சம்பாதிக்கிறார்.
'இப்படி வித்தியாசமாக முடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை, உங்களுக்கு எப்படி வந்தது...' என, கேட்டனர்.
'என் சிகை அலங்காரம், 'ஸ்டைலாக' இருக்க வேண்டும் என, என் மகள் ஆசைப்பட்டாள். அவளது ஆசையை நிறைவேற்றுவதற்காக, முடி வளர்த்தேன். இப்போது, அந்த முடி தான், எனக்கு சோறு போடுகிறது...' என்கிறார், பென்னி ஹர்லென்.
ஜோல்னாபையன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா

    மகளின் ஆசையை நிறைவேற்றி வருமானம் பெற்றார் தந்தை. விளம்பரம் வருமானம் வாழ்க்கை..... வாழ்த்துக்கள் தந்தையே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement