Advertisement

ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!

Share

உலகில் வாழ்ந்தோம், இறந்தோம் என, இருக்காமல், வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆசை, சிலருக்கு உண்டு.
அமெரிக்காவைச் சேர்ந்த, லீ ரெட்மண்ட் என்ற பெண்மணிக்கு, இப்படிப்பட்ட ஆசை மனதுக்குள் உருவாகி, அது, வெறியாக மாறி விட்டது.
இதற்காக, 1980ம் ஆண்டிலிருந்து, தன் கைவிரல் நகங்களை நீளமாக வளர்க்க துவங்கினார்; 40 ஆண்டுகளாக, நகத்தை வெட்டுவதே இல்லை. தினமும், அரை மணி நேரம், 'ஆலிவ் ஆயிலுக்'குள் நகங்களை மூழ்க வைத்து, பார்த்து பார்த்து பராமரித்து வளர்த்து வந்தார்.
அவரது நகத்தை நேராக நிமிர்த்தி அளந்தால், 28 அடி இருக்குமாம். ஆனால், அவரது, 40 ஆண்டு ஆசை, ஒரே நாளில் முடிவுக்கு வந்து விட்டது. சமீபத்தில் நடந்த கார் விபத்தில், அவரது கைககளில் கடுமையான காயம் ஏற்பட்டதால், நகங்களை வெட்டி விட்டனர், டாக்டர்கள்.
அழகான, நீளமான நகங்கள் இல்லாத, தன் விரல்களை பார்த்து பார்த்து, அழுது வருகிறார், லீ ரெட்மண்ட்.
— ஜோல்னாபையன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Manian - Chennai,இந்தியா

  நண்பர் குர்மீந்தர் சிங் சொன்ன கதை: பஞ்சாபில் சண்டிகரில் ஒரு மதராசி கோபால் என்பர் ஆராய்ச்சி மாணவராய் இருந்தார். நேரக்குறைவு, தினம் ஷேவிங் வேண்டாம் என்று முடி வளர்த்தார்.சக நண்பர் மன்மோகன் சிங் சைனியின் ஆலோசனைப்படி, ஒரு சிவப்பு டர்பனும் வைத்துக் கொண்டு வலம் வந்தார். ரோமில் இருந்தால் ரோமானியர் போல் இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஒரு நாள் அமிர்தசரஸ் நண்பர்கள் இருவர் மன்மோகனை பார்க்க வந்தார்கள். அவர்கள் 6 அடி ஆஜானுபாகு விளையாட்டு வீரர்கள். மன்மோகன் இவர் மதராசி கோபால் சிங் என்று அறிமுகப் படுத்தினார். உடனே வந்தவர்களில் ஒருவர் "மதராசி சர்தார், பகுத் திமாக் வாலா(அதி புத்திசாலி). நம்ம சிஸ்டர் சுமேதாவுடன் குடுமாயி(திருமணம்) செய்யலாமே என்றாராம்'. கோபால் அவசரமாக அங்கிருந்து ஓடி ஷேவ் செய்து,, குளித்துவிட்டு லுங்கி கட்டடிக் கொண்டு வந்தாராம். அப்போதும் பெரிய சர்தார்ஜி, 'கோயி வாந்தா நஹீ'- பரவால்லை கிளீன் ஷேவன் சர்தார்ஜியையும் ஏற்றுக்கொள்வாள் தங்கை சுமேதா என்றாறாம். அதற்கு கோபால் பதில் சொன்னாராம்- நான காஸ்மோபாலிடன் தான். ஆனல் உங்கள் அழகான தங்கை 6 மாசம் கழித்து, உருளைக்கிழங்கு சாக்காக,அல்லது கோதுமை மூட்டையாக மாறாமல் இருப்பாள் என்ற உத்திரவாதம் இல்லையே. நெய்யும், இனிப்பும் ஆலு பரோட்டாவையும் அள்ளி அன்போடு வீசுவாளே என் சம்பளம் போராதே என்று பரிதாபத்தோடு சொன்னவரை பரிதாபத்துடன் பார்த்தார்களாம் வந்தவர்கள். கோபாலின் -மழிக்குமுன்,மழித்த பின் போட்டோவை காட்டினார் குர்மீந்தர்.நகம் வளர்த்த நாயகிக்கு அந்த கவலை இல்லையே

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  எத்தனையோ கிறுக்குத்தனகளில் இதுவும் ஒன்று. என் அலுவலக நண்பர் ஒருவர், நீண்ட நகம் வளர்த்தார். ஒரு பதவி உயர்வு நேர்காணலின்போது, மேல் அதிகாரி, 'இந்த ஆய்வுக்கூட வேலைக்கு, ட்ரிம்மாக வெட்டிய நகங்கள் தேவை. ' என்று வற்புறுத்தினார். வயிறு தானே முக்கியம், நகத்தை 'தியாகம்' செய்தார். சக ஊழியர்களின் கலாய்த்தல் , நகராஜன் என்று செல்லப்பெயர் வைத்துவிட்டனர். \\

 • Manian - Chennai,இந்தியா

  "ஆசை நகம் அழிந்து போச்சே, யாரிடம் சொல்வேனடி தோழீஈஈஈஈ, நேசம் மரக்கவில்லை எனில், நகமும் மறக்கலாமோ. ஓஓ ஓ ஓ"? சோகப் பாடல் அங்கே பின்னால் பாடுவது யார்?

 • R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா

  அடி அடியாக பார்த்து பார்த்து வளர்த்து நகம் தானே போச்சு. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன மாதிரி . அதிகம் ஆசை வெச்சா இப்படித்தான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement