Advertisement

நோக்கியாவின் 3 அறிமுகங்கள்

Share

இயர்போன் மற்றும் மொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்புக்காக 'நோக்கியா' பிராண்டு உரிமத்தை பெற்றுள்ள 'ரிச்கோ டெக்னாலஜி' நிறுவனம், இரண்டு ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்களையும், ஒரு ஹெட்போனையும் 'நோக்கியா' பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இவை மூன்றும், மூன்று விதமான தேவைகளை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ளன.இ - 3200 எனும் இயர்போன், செல்லும் வழியில் இசையை கேட்பதற்கு ஏற்றதாகவும் இ - 3500 இயர்போன், அதிக தரம் வாய்ந்த ஆடியோவை வழங்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இ - 1200 காதில் மேற்புறத்தில் அணிந்து கொள்ளும் வகையில் வந்திருக்கும் ஹெட்போன் ஆகும். இது அதிக ஒலி அனுபவத்தை தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இருப்பினும், இன்னும் இவற்றின் விலை விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • கவுதம் -

    மொதல்ல நோக்கியாவுல charging port பிரச்சினைய சரி பண்ண சொல்லுங்க,

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement