Advertisement

சோனியின் புதிய இயர்போன்

Share

சோனி நிறுவனம் 'ஆப்பிள் ஏர்போட்ஸ் புரோ'வுக்கு போட்டியாக, 'சோனி டபுள்யு.எப் - 1000 எக்ஸ்.எம்., 3' ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனை, அடுத்த மாதம், இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.இந்த இயர்போன், வெளிப்புற சப்தங்கள் கேட்காத வகையிலான 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங்' வசதியுடன் கூடிய, ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனாகும்.

சோனி நிறுவனம், அண்மையில் தான் இந்தியாவில் அதன் முதல் ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்களான 'டபுள்யு. எப் - எச்.பி., 800 என்' மற்றும் 'டபுள்யு. எப் - எச்.பி.,700' ஆகியவற்றை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே 18,990 ரூபாய் மற்றும் 9990 ரூபாய் ஆகும்.இந்நிலையில் அடுத்த மாதம், 'டபுள்யு. எப் - 1000 எக்ஸ். எம்., 3' இயர்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் விலை 20 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement