Advertisement

வீ டூ லவ் சிறுவர்மலர்!

Share

என் வயது, 58; சிறுவர்மலர் இதழை, பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். மேலோட்டமாக இல்லாமல், முதலில் இருந்து, கடைசி வரி வரை விடாமல் அனுபவித்து படிக்கிறேன்; அலாதி இன்பம் அடைகிறேன்.
ஒவ்வொரு பகுதியும், மிக ரசனையுடன் உருவாக்கப்படுவது கண்டு வியக்கிறேன். அந்த ஈடுபாடு போற்றத்தக்கது; பாராட்டுக்குரியது.
அறிவுக்கு விருந்தளிப்பதிலும், குபீர் சிரிப்பை வர வைப்பதிலும் முன்னிலை வகிக்கிறது சிறுவர்மலர். சிறுவர்கள் ஆவலுடன் படிக்கும் படக்கதையிலும், அற்புதமான கருத்துச் செறிவை காண்டு மகிழ்கிறேன்.
போட்டி, படைப்புகளுக்கு பரிசு அள்ளித் தரும் வள்ளல் தன்மை, பத்திரிகை உலகில், சிறுவர்மலர் இதழுக்கு மட்டும் தான் உள்ளது. வாசகர்களை, உன்னத ஸ்தானத்தில் மதிப்பதை போற்றுகிறேன்.
சிறுவர்மலர் இதழை, இன்றைய சிறுவர், சிறுமியரை விட, முன்னாள் சிறுவர்களான, என் போன்றோர் தான் போட்டிபோட்டு படித்து வருகிறோம். இந்த உண்மையை உரைப்பதில் எந்த தயக்கமுமில்லை. வாழ்த்துகிறேன்!

ஆர்.ஹரிகோபி, புதுடில்லி.
தொடர்புக்கு: 98712 72732

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement