Advertisement

சின்னக் குழந்தை!

Share

மேதைமை, ஆளுமை, திறமை போன்ற பண்புகள் மனிதருக்குள் வேறுபடும். திறமையற்ற, ஒன்றுக்குமே லாயக்கில்லாத எவரும், உலகில் கிடையாது.
கிடைக்கும் சந்தர்ப்பம், அதைப் பயன்படுத்தும் விதம் போன்றவற்றைப் பொறுத்து, திறமையில் கூடுதல், குறைவு ஏற்படலாம். அவ்வளவு தான்.
ஆற்றல் மிக்கவர்களிடம், கர்வம் வந்தால், நற்பண்புகள் மறையும்.
பல விஞ்ஞான உண்மைகளை கண்டுபிடித்து, புகழேணியில் நின்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டனை, கர்வம் தீண்டவேயில்லை.
பூமிக்கு, ஈர்க்கும் சக்தி இருப்பதால் தான், மரத்தில் இருந்து ஆப்பிள் விழுகிறது என்ற உண்மையை கண்டுபிடித்த மேதை அவர்.
மிகவும் அடக்கமாக வாழ்ந்தார்.
ஒருமுறை, அவரை பார்க்க ஒரு பெண் வந்திருந்தார். பேசிக் கொண்டிருந்த போது, நியூட்டனை வானளாவப் புகழ ஆரம்பித்து விட்டார்.
'அம்மா... உண்மை என்னும் பெரும் சமுத்திரக் கரையில், சிறு கூழாங்கற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும், குழந்தையைப் போன்றவன் நான்; அதிகம் புகழாதீர்...' என்று தடுத்தார், நியூட்டன்.

மொட்டுக்களே... நியூட்டன் போல் வாழ பழகுங்க... தலைக்கனம் வந்தால், அழிவு நிச்சயம் என்பதை மறந்துடாதீங்க.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement