Load Image
Advertisement

அதிக மகசூலுக்கு பாசிப்பயறு 'கோ 8': கோவை வேளாண் பல்கலை சாதனை

தமிழ்நாட்டில் பாசிப்பயறு சுமார் 1.89 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு ஆண்டுக்கு 1.21 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
சராசரி மகசூல் எக்டருக்கு 642 கிலோவாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் விதமாக ஒரே சமயத்தில் காய்கள் முதிர்ச்சியடையும் தன்மை கொண்ட பாசிப்பயறு ரகம் உருவாக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கோ 923 - வி.சி. 6040 ஏ என்ற ரகங்களை ஒட்டு சேர்த்து தனி வழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த குறுகிய கால ரகம் 55, - 60 நாட்களில் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டது.

இந்த ரகம் சராசரியாக ஒரு எக்டருக்கு 1000 கிலோ மகசூல் தரவல்லது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் பயிரிட ஏற்ற நல்ல உயர் விளைச்சல் ரகமாகும். இயந்திர அறுவடை செய்யவும் ஏற்றது.
நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளரக்கூடியது. 2019 ல் பயறு வகை துறையிலிருந்து 18 ஆயிரம் கிலோ விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். எனவே பாசிப்பயறு கோ 8 ரகத்தினை வரும் ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்து நல்ல விளைச்சல் மற்றும் லாபம் பெற்று பயனடையலாம்.

ஆலோசனைக்கு 0422 245 0498.
பேராசிரியர் ஜெயமணி
தலைவர், பயறு வகைத்துறை
இணை பேராசிரியர் முத்துசாமி
வேளாண் பல்கலை, கோவை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement