dinamalar telegram
Advertisement

வருவாயை வாரி வழங்கும் வாத்து

Share

வாத்து வளர்ப்புக்கு தண்ணீர் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. குடிக்க மட்டும் தண்ணீர் இருந்தால் போதும். வாத்து இனங்களில் காக்கிகேம்பல், இந்தியன் ரன்னர் ஆகிய இரு இனங்களும் முட்டையிடும் வாத்துகளாகும். இவற்றில் காக்கிகேம்பல் ஒரு ஆண்டுக்கு 300 முட்டைகள் இடும். வாத்து வளர்ப்பில் பெரிய அளவில் கொட்டகை தேவைப்படாது. வாத்துக்கள் இரவு நேரங்களில் அல்லது அதிகாலையில் முட்டை இடும்.
காலை, மாலை வேளைகளிலும் வாத்துகளுக்கு தீவனம் வைக்க வேண்டும். தீவனத்தை ஈரமாக்கி தந்தால் விழுங்குவதற்கு சுலபமாக இருக்கும்.

குஞ்சுகளின் ஆரம்ப பருவத்தில் வேகவைத்த அரிசி, குருணை கொடுக்க வேண்டும். வளர்ந்த பருவத்துக்கு பின்னரே மற்ற வாத்துகளுடன் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும். வாத்துகளின் அலகு முழுவதும் நனைக்கும் அளவுக்கு நீர் எப்போதும் வேண்டும்.

ஆண், பெண் இனச் சேர்க்கைக்கு வாத்துகளுக்கு 6 முதல் 8 வார வயது இருக்க வேண்டும். பிளேக், பூஞ்சான நோய் மற்றும் பாஸ்சுரெல்லா போன்ற நோய்கள் வாத்துகளை பாதிக்கும்.
பிளேக் வராமல் தடுக்க 8 முதல் 12 வார வயதில் தடுப்பூசி போட வேண்டும்.

ஐப்பசி முதல் பங்குனி வரை அதிக எண்ணிக்கையில் முட்டைகள் கிடைக்கும். கோழி முட்டையை ஒப்பிடும் போது வாத்து முட்டை எடையில் கூடுதலாக இருப்பதோடு, சத்துக்களும் அதிகம் இருக்கும்.

இரவில் முட்டையிடுவதால் முட்டைசேகரிப்பில் சிரமம் இருக்காது. அதிகாலை முட்டைகளை சேகரித்து விட்டு பகல் பொழுதில் மேய்ச்சலுக்கு அனுப்பலாம். கோழிகளை ஒப்பிடும் போது வாத்துகள் மூன்று ஆண்டுகள் வரை முட்டையிடும். கோழி முட்டையை விட வாத்து முட்டைக்கு கூடுதல் விலை கிடைக்கும். வாத்து வளர்ப்போர் நல்ல லாபம் பெறும் வாய்ப்புகள் உண்டு.

ஆலோசனைக்கு 94864 69044
டாக்டர். வி. ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement