dinamalar telegram
Advertisement

காலநிலைக்கேற்ற மாற்றுப் பயிர் திட்டம்

Share

மாற்றுப் பயிர் திட்டம் என்றதும் பொதுவாக நெற் பயிருக்கு மாற்றுப்பயிர் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் நெற் பயிருக்கு மாற்றுப்பயிர் கிடையாது. அப்படி செய்தால் அது நமது உணவு ஆதாரத்தை பாதிக்கும்.மாற்று பயிர்திட்டம் என்பது நம் நிலங்களில் மண் வளத்திற்கேற்ப மாறுபட்ட கால நிலைகளை சமாளித்து உழவர்களின் லாபம் பெருக புதிய பயிர் வகைகளை பயிர் திட்டத்தில் புகுத்தி மொத்த வருமானத்தை பெருக்குவதாகும்.குறுவை பருவத்தில் போதிய மழையின்மை மற்றும் உரிய நேரத்தில் பாசனத்திற்கு நீர் கிடைக்காததால் நெற் பயிர் சாகுபடி பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது. இதுபோன்ற காலங்களில் மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியமாகிறது.குறுவை பருவத்தில் குறைந்து வரும் நீர்த்தேவையை கருத்தில் கொண்டு நெல், கரும்பு மற்றும் வாழைப் பயிர்களின் சாகுபடி பரப்பளவை குறைத்து குறைந்த நீர்த்தேவை உள்ள பயிர்களான பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர்களை அதிக பரப்பளவில் பயிர் செய்யலாம். மொத்த சாகுபடி பரப்பில் சுமார் 10--12 சதவீதம் வரை பல்லாண்டு பயிர்களான மா, சப்போட்டா, சவுக்கு, முந்திரி மற்றும் கொய்யா போன்ற பயிர்களை பயிர் செய்து லாபம் ஈட்டலாம்.
தொழில் நுட்பங்கள்* நெல் பயிரிட வேண்டிய இடங்களில் அதிக லாபம் பெற பருவத்திற்கேற்ப உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்களை தேர்வு செய்து உரிய முறையில் தேவைப்படும் இடங்களில் திருந்திய நெல் சாகுபடியும், நேரடி நெல் விதைப்பும் பின்பற்றலாம்.* குறிப்பாக மக்காச்சோளம் மற்றும் பருத்தி பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் உயர் விளைச்சல் பெற வீரிய ஒட்டு ரகங்களை விதை நேர்த்தி செய்து சமச்சீர் உரமிட்டு விளைச்சலை அதிகரிக்கலாம்.* கிணற்றுப்பாசன பகுதிகளில் சொட்டு நீர், மழை துாவி மூலமாக நீர்ப்பாசனம் செய்து விளைச்சலை அதிகரிப்பதோடு நீரை சேமிக்கவும் செய்யலாம்.* சமச்சீர் உரமிடுவதுடன் அங்கக உரங்கள் மற்றும் மண் புழு உரமிட்டு மண்ணின் பவுதீக மற்றும் உயிர் சக்தியை அதிகரிக்கலாம்.* பயிர்களுக்கு ஏற்படும் நுண்ணுாட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து தேவைப்படும் விதத்தில் நுண்ணுாட்டச்சத்தை இட்டு விளைச்சலை அதிகரிக்கலாம்.* மாற்றுப்பயிர்களை தேர்வு செய்யும்போது ஒரே மாதிரியான பயிர்களை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.
இ.சுப்பிரமணியன், ப. அருணாசலம், இரா.துரைசிங்உழவியல் துறை, வேளாண் கல்லுாரி, மதுரை. 0452 242 3040

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement