Advertisement

போட் இயர்பட்ஸ்

Share

பிரபல, 'போட்' நிறுவனம், புதிதாக, 'போட் ஏர்ட்டோப்ஸ் 511வி2' ஒயர்லெஸ் இயர்பட்சை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய இயர்பட்ஸ், இப்போது, 'ஆக்டிவ் பிளாக்' எனும் ஒரே ஒரு வண்ணத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், செம்பு பினிஷிங்கும் இருக்கிறது. இப்படி ஒரு கலவையில் இயர்பட்ஸ் பொதுவாக சந்தையில் வருவதில்லை. இளைஞர்களை கவரும் வகையில் இதை வடிவமைத்துள்ளார்கள். இது, 6 மி.மீ., டிரைவர்ஸ் கொண்டது.
'புளுடூத் 5.0' வசதி கொண்ட இந்த இயர்பட்ஸ், 30 அடி துாரத்திலும் இணைப்பை பெறும். இதன் எடை, 5.5 கிராம். மேலும், துாசி மற்றும் தண்ணீரை தடுக்க கூடிய வகையில், 'ஐ.பி.எக்ஸ்.,4' மதிப்பீட்டையும் கொண்டிருக்கிறது.

விலை 2,999 ரூபாய்.

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement