Advertisement

ரவுத்திர வீணை!

Share

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,

'நிர்வாக அலட்சியத்தை, நிவாரண உதவி சரி பண்ணிடும்'னு மனப்பூர்வமாகவே நம்ப ஆரம்பிச்சிட்டீங்களா?
'கொரோனாவை வென்று காட்டுவோம்'னு உங்க அரசு அதிகாரிகள் பேட்டி கொடுத்துட்டு இருந்த நேரத்துலதான், என் பிள்ளை இறந்தான். அய்யா...
அவன் சாவுக்கு காரணம் கொரோனா இல்ல... உங்க அரசு நிர்வாகத்தோட அலட்சியம்!
இதய நோயாளியான என் கணவருக்கான சிகிச்சை செலவு, பசுமை வீட்டுக்கு நாங்க செலுத்த வேண்டிய கடன், இளைய மகனோட கல்வி செலவு... இதையெல்லாம் சமாளிக்கத்தான் டெக்ஸ்டைல் மில் வேலைக்காக பிப்ரவரி 13ம் தேதி நாக்பூருக்கு கிளம்பிப் போனான் என் மகன்.
நாடு முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுமே அவன் வேலை பார்த்துட்டு இருந்த அந்த தனியார் ஆலை, பணியாளர்களை வெளியேத்திடுச்சு. பணமும், உணவும் இல்லாத கடும் நெருக்கடியில, உயிரை காப்பாத்திக்க மஹாராஷ்டிராவுல இருந்து நடைபயணமா ஊருக்கு கிளம்பிஇருக்கான் என் புள்ள. ஏப்ரல் 1ம் தேதி ராத்திரி தெலுங்கானா போலீஸ்கிட்டே இருந்து அந்த தகவல்... என் மகன் மாரடைப்புல இறந்துட்டான்னு!
சடலத்தை மீட்டு கொண்டு வர்றதுக்கு கூட உங்க அரசு உதவலை; இதுதான்... மக்களுக்கு அரசு செய்ற கடமையா; பிரமாதம்யா... நீங்க நல்லாயிருக்கணும்!
- 'கொரோனா' ஊரடங்கு கட்டுப்பாட்டில் 22 வயது மகன் லோகேஷை இழந்த ராதிகா, பள்ளிப்பாளையம், நாமக்கல்.

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement