Advertisement

வெளியானது 'விவோ வி 19'

விவோ நிறுவனம், அதன் புதிய, 'விவோ வி 19' ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன், விவோ இந்தியா இ-ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட, 'ஆன்லைன்' தளங்களிலும், இந்தியா முழுதும் உள்ள விவோ ரீடெய்ல் ஸ்டோர்களில் ஆப்லைனிலும் கிடைக்கிறது.

32+8 எம்.பி., இரட்டை முன்பக்க கேமரா, மற்றும் 48 எம்.பி., ஏ.ஐ. குவாட் பின்புற கேமராவுடன் வந்துள்ளது. இதிலுள்ள, 'சூப்பர் நைட் மோடு' மூலம், குறைவான வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படத்தை எடுக்க முடியும்.

வீடியோவை பொறுத்தவரை, கைகள் அசைந்தாலும், அசைவில்லாத வீடியோவை எடுக்க முடியும். மேலும், 4,500 எம்.ஏ.எச்., பேட்டரி உள்ளது. கூடுதலாக, 33 வாட் பிளாஷ் சார்ஜர் வசதியும் கொண்டுள்ளது.

'பியானோ பிளாக்' மற்றும் 'மிஸ்டிக் சில்வர்' என இரண்டு மிரட்டலான நிறங்களில் கிடைக்கிறது. ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நிறைய சலுகைகளும் தரப்பட்டு உள்ளன.

விலை: 8+128 ஜி.பி., - ரூ.27,990
8+256 ஜி.பி., - ரூ. 31,990

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

    விவோ ஒரு சீனா கம்பெனி. மக்கள் இதை அடியோடு புறக்கணிக்க வேண்டும்.

  • Natarajan -

    Dont promote "Made in China" products...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement