Advertisement

'டக்கர்' விக்டர்

டிவிஎஸ் விக்டர் 110 பைக்கின் பிஎஸ்-6 மாடல் விரைவில் விற்பனைக்கு வருகிறது. புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப, பியூவல் இன்ஜெக் ஷன் சிஸ்டத்துடன் இன்ஜின் மேம்படுத்தப் பட்டுள்ளது. இதன் பிஎஸ்-6 தரத்திலான 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 8.08 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

எல்இடி ஹெட்லேம்ப், புதிய வண்ணங்கள், கிராபிக்ஸ் ஸ்டிக்கர், 17 இன்ச் டயர்கள், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறத்தில் ஹைடிராலிக் ஸ்பிரிங் சஸ்பென்ஷன், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், சொகுசான இருக்கை அமைப்பு, அலாய் வீல்கள், டியூப்லஸ் டயர்கள், சின்க்-பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம்.

எதிர்பார்க்கப்படும் விலை ரூ. 61,000 - 67,000 (எக்ஸ்ஷோரூம்)

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement