Advertisement

ஏர்பார்

Share

லேப்டாப்பை மிக எளிதாக, டச் ஸ்கிரீன் வசதி கொண்டதாக மாற்ற இது உதவும். மெலிதான, மிகவும் எடைகுறைவான இந்த சாதனத்தின் மூலம், லேப்டாப்பை, டச் ஸ்கீரின் வசதி கொண்டதாக மாற்றிவிடலாம். இந்த ஏர்பாரை, லேப்டாப் டிஸ்பிளேயின் அடியில் வைத்து, லேப்டாப்பின் யு.எஸ்.பி.,யில் பொருத்தி விட வேண்டும். அவ்வளவு தான்! டச் ஸ்கிரீன் ரெடி! விண்டோஸ் 10, மேக் லேப்டாப்புகளில் பயன்படுத்தலாம். சிறிய வணிகங்கள் இதைப் பயன்படுத்தி, வீடியோ கான்பரன்ஸ், மீட்டிங், வாடிக்கையாளர்களுக்கு விளக்குவது உள்ளிட்டவற்றை மேம்படுத்தி கொள்ளலாம்.
விலை 1400 ரூபாய்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement