Advertisement

'சூப்பர்' சுஸுகி

சுஸுகி இன்ட்ரூடெர் 150 பைக்கின் பிஎஸ்-6 மாடல் அறிமுகமாகியுள்ளது. புதிய ஈக்கோ பெர்பார்மென்ஸ் தொழில்நுட்பம், பியூவல் இன்ஜெக் ஷன் சிஸ்டம் காரணமாக மாசு உமிழ்வு குறைவாக இருக்கும். இதன் பிஎஸ்-6 தரத்திலான 154.9 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 13.6 பிஎச்பி பவரையும், 13.8 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது. விலை குறைவான குரூஸர் பைக், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்சிடி ஸ்கிரீன் உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், 17 இன்ச் அலாய் வீல்கள், டுயூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 11 லிட்டர் பிடிக்கும் பெட்ரோல் டேங்க் சிறப்பம்சம்.
மெட்டாலிக் மேட் பிளாக், ரெட், கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக், மெட்டாலிக் மேட் டைட்டானியம் சில்வர், மெட்டாலிக் மேட் டைட்டானியம் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும். பிஎஸ்-4 மாடலுடன் ஒப்பிடுகையில் ரூ.10,000 அதிகம்.

விலை: ரூ.1.20 லட்சம்(எக்ஸ்ஷோரூம்)

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement