உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் மாஸ்க் (mask) எனப்படும் முகமூடி அணியத் தேவையில்லை. ஆனால், இவர்கள் நோயாளிகளைப் பார்க்கச் சென்றால், அல்லது கவனித்துக்கொண்டால் முகமூடி அணிய வேண்டும்.
1. காற்றோட்டமான அறையில் இருப்பவர்கள், வெட்ட வெளியில் இருப்பவர்கள் முகமூடி அணியத் தேவையில்லை.
2. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் முகமூடி அணிய வேண்டும்.
3. ஏ.சி. அறையில் அமர்ந்து பணிபுரியும் ஊழியர்கள், விமானம், ஏ.சி. இரயில் பெட்டியில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக முகமூடி அணிய வேண்டும்.
4. முகமூடிகளையும் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். சிலர் நாள் முழுக்கவும் அதை மாட்டிக்கொண்டு திரிவது பயனற்றுப் போகும். காரணம் முகமூடியில் தூசு, வைரஸ்கள் படிந்திருக்கும்.
5. முகமூடியை அணிவதற்கு முன்னும், கழற்றிய பிறகும் நன்கு சோப்புப் போட்டுக் கைகளைக் கழுவ வேண்டும்.
6. முகமூடியை அணிந்த பிறகு அதை அடிக்கடி கைகளால் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
7. முகமூடியை முதலில் பின்னால் தான் கழற்ற வேண்டும். முன்புறம் கழற்றக் கூடாது. படிந்திருக்கும் வைரஸ்கள் கரங்களில் படிய வாய்ப்புண்டு.
8. கழற்றிய முகமூடியை உடனடியாகக் குப்பைத் தொட்டியில் போட்டு மூடிவிடவேண்டும். குப்பைத் தொட்டியை திறந்து வைக்கக் கூடாது.
9. கொரோனா வைரஸ், கண்வழியாகவும் உள்ளே சென்று மூக்கின் மூலம் தொண்டையை அடைந்து, நுரையீரலைப் பாதிக்கிறது. ஆகையால், கண்களை முழுதாக மூடியிருப்பது போன்ற கண்ணாடிகளையும் அணிய வேண்டும். அப்போதுதான் முழுப் பாதுகாப்பு.
யாரெல்லாம் முகமூடி அணிய வேண்டும்?
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!