Advertisement

ரெளத்ர வீணை

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,

ஒரு விவசாயி நொடிஞ்சு போறதுக்கு காரணம் வறட்சி மட்டுமா? எங்க கதையை கேட்டுட்டு பொறுமையா பதில் சொல்லுங்க. செழிப்பான நீர்வளத்தோட கிணறு இருந்தும், நெல், வெங்காயம்னு யோசிக்காம, சோளம், பருத்தின்னு பயிரிட்டிருக்கோம். என்ன பண்றதுய்யா... உங்க ஆட்சியில எங்களுக்கு விவசாய மின் இணைப்பு கிடைக்கலையே!

உடனடி மின் இணைப்புக்காக, 'சுயநிதி' திட்டத்துல 2009ம் ஆண்டுல விண்ணப்பிச்சேன். குடிக்காடு கிராமத்துல, 214/3பி1 சர்வே எண்ணுல இருக்குற என்னோட இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை, வரகுபாடி வி.ஏ.ஓ.,வும், சிறுவாச்சூர் மின்நிலைய பொறியாளர்களும் நேர்ல வந்து பார்த்துட்டு, அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள்ல இணைப்பு வந்திரும்னு சொன்னாங்க.

ஆனா பாருங்க... இன்னும் மின் இணைப்பு வரலை. நிலைமை இப்படியிருக்க, 2017ம் ஆண்டுல 'தட்கல்' திட்டத்தை நடைமுறைப்படுத்திட்டீங்க!அதாவது, 500 ரூபாய் கட்டி பத்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே சுயநிதி திட்டத்துல பதிவு பண்ணியிருக்கிற நான், இரண்டரை லட்சம் ரூபாய் 'தட்கல்' கட்டணம் செலுத்துனா உடனடி மின் இணைப்பு... சபாஷ்! மனசாட்சியோட சொல்லுங்கய்யா... ஒரு விவசாயி நொடிஞ்சு போறதுக்கு காரணம் வறட்சி மட்டுமா?

- விவசாய மின் இணைப்பிற்காக 'சுயநிதி' திட்டத்தில் பதிவு செய்து, 11 ஆண்டுகளாக காத்திருக்கும் அம்சவள்ளி, பெரம்பலுார்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Raj - Chennai ,இந்தியா

    வருத்தம் அளிக்கிறது.

  • ஆப்பு -

    மின் இணைப்புக்கு மோடி ஐயாவை அணுகவும். அவிய்ங்க ஆளுங்கதான் மின்சாரம் இல்லாத கிராமமே கிடையாதுன்னு சொல்லிட்டு வர்ராங்க.

  • selvaraju - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    தமிழக விவசாயிகளின் நிலைமை இதுதான். ஒரு பக்கம் அரசாங்கம் வஞ்சிக்கின்றது. மறுபக்கம். நாம் விளைவித்த பொருட்க்களின் விலையை. வியாபாரி நிர்மாணிக்கின்றான். வள்ளி திருமணம் நாடகத்தில். நாரதராக வேடம் அணிந்து வரும் திரு.கவிராசு அவர்கள், இந்த கருத்தை அழகாக எடுத்து உரைத்து. முடிவாக ஒன்று சொல்லுவார்."அரண்மனை கோழி முடடை. அம்மியையும் உடைக்கும். நமக்கேன் பெரிய இடத்து வம்பு என்று. ஒவ்வொரு மனிதனும்.இதேபோல் நினைத்தால்,தமிழக விவசாயிகளின் நிலைமை என்னவாகும் மக்களே சிந்தியுங்கள், செயலாற்றுங்கள். நன்றி. வாழ்க வளமுடன்- ஏழை விவசாயி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement