Advertisement

வீ டூ லவ் சிறுவர்மலர்!

தேனி, புதிய பேருந்து நிலையம் அருகே பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறேன். வாரம் இருமுறை, புதன், சனிக்கிழமைகளில், இறைச்சி வியாபாரமும் செய்கிறேன். என் கடைக்கு, வெள்ளி தோறும் ஒரு கூட்டம் வந்து கொண்டிருந்தது; தற்போது, அந்த கூட்டம் சனிக்கிழமைகளில் வருகிறது.
கிராமப்புறத்தை சேர்ந்த அவர்களிடம் விசாரித்தேன்.
'சிறுவர்மலர் வாங்க நகருக்கு வரும் போது, பொருட்களையும் வாங்கி செல்கிறோம்... இப்போது சனிக்கிழமை தான் வெளிவருகிறது...' என்று கூறினர்.
ஆர்வமிகுதியால் நானும் இதழை வாங்கி படித்தேன்; பெட்டகமாகவே உள்ளது. நானும், 'ஐ டூ லவ் சிறுவர்மலர்!' என, ரசிகனாக மாறிவிட்டேன்.
அற்புத அனுபவங்களை விவரிக்கும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, இனிய நினைவுகளில் மூழ்க வைக்கிறது. அறிவு தாகத்தை ஊட்டி, அடுத்த வாரத்துக்கு ஏங்க வைக்கிறது. சனி தோறும் வந்து ஆரவாரம் செய்யும், சிறுவர்மலர் இதழுக்கு நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்.
- எம்.ஜெயச்சந்திரன், தேனி.
தொடர்புக்கு: 82708 06690

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement