Advertisement

காவல்துறையில் 'ஜூனியர் ரிப்போர்ட்டர்' பணி

தமிழக காவல்துறையில் 'ஜூனியர் ரிப்போர்ட்டர்' பிரிவில் 29 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 1.7.2019 அடிப்படையில் பொதுப்பிரிவினர் 30, பி.சி., எம்.பி.சி., 32, எஸ்.சி., / எஸ்.டி., 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து பயிற்சி மற்றும் தட்டச்சு பயிற்சி முடித்திருக்க வேண்டும். 'கம்ப்யூட்டர் ஆட்டோமேஷன்' படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஸ்கில் டெஸ்ட் மற்றும் வாய்மொழி தேர்வு.

தேர்வு மையம்: சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2nd Floor, Old Coastal Security, Group Building,DGP Office Complex, Mylapore, Chennai-4.

கடைசிநாள்: 31.3.2020.

விபரங்களுக்கு: www.tnpolice.gov.in

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement