Advertisement

இந்தியாவில், 'இசட் பிளிப்'

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, 'சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்' ஸ்மார்ட்போன், அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்தில், இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. மத்தியில் மடக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதால், மடங்கிய நிலையில் ஒரே நேரத்தில் இரு செயலிகளை இந்த போனில் செயல்படுத்த முடியும். 21ம் தேதி முதல் முன்பதிவு ஆரம்பமாகி உள்ள நிலையில், 26ம் தேதி முதல் வினியோகம் செய்யப்படும்.

குறைந்த அளவிலான இருப்பே இருப்பதால், முன்பதிவு செய்து மட்டுமே பெற முடியும். தற்போது, மூன்று வண்ணங்களில் கிடைக்கும். 2 லட்சம் தடவை, இந்த போனை தாராளமாக மூடி, திறக்கலாம்.

8 ஜி.பி., / 256ஜி.பி., மாடல் போனின் விலை, இந்தியாவில், 1.10 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement