Advertisement

தமிழில், 'கேன்ஸ்கேனர்' செயலி

செல்போன்களில் ஆவ ணங்களை படம் எடுத்து, சேமித்து வதை்துக்கொள்ள உதவும் செயலியான, 'கேம்ஸ்கேனர்' தற்போது, ஆங்கிலம் தவிர, நான்கு இந் திய மொழிகளில் கிடைக்கிறது. ஹிந்தி, வங்கம், தமிழ், சமஸ்கிருதம் என நான்கு மொழிகளில் இதை அணுகலாம். புதிய உபயோகிப்பாளர்கள், தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்கள், விருப்பமொழிக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., போன்களில் இந்த வசதியைப்பெறலாம். உலகளவில் மிகவும் பிரபலமான இந்த கேன்ஸ்கேனர், அண்மையில் சிக்கலுக்கு ஆளானது நினைவிருக்கலாம்.

பிரபல கேஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், கேன்ஸ்கேனரில், விளம்பரங்களை வழங்கும் பயன்பாட்டின் ஒரு பகுதியில், 'மால்வேர்' எனும் தீங்கிழைக்கும் குறியீடு இருப்பதைக் கண்டறிந்ததாகக் கூறினார்கள். இதனையடுத்து, இந்த செயலியை, பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது, கூகுள். பின்னர் இப்பிரச்னையை சரி செய்து, மீண்டும் கூகுள் பிளேவில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement