Advertisement

மலர் சாகுடியில் வளமான லாபம்

விவசாயிகள் பலர் தோட்டக்கலை பயிர்களில் நிறைய வகையான காரணங்களால் மலர் சாகுபடி மேற்கொள்ள வாய்ப்புள்ள போதும் அதை செய்வதில்லை.

நல்ல மண் வளம் உள்ள பல விவசாயிகள் தயக்கம் காட்டி தள்ளிப்போடுவது தவறு. போதிய நீர் இல்லை, போதுமான ஆள் இல்லை, விற்பனைக்கு மார்க்கம் இல்லை, போக்குவரத்து வசதி இல்லை என ஏதேதோ சாக்குப்போக்கு கூறுவர்.

இப்படி எத்தனையோ பிரச்னைகளை எதிர் கொண்டாலும் அதே ஊரில் சிலர் குறுகிய காலத்தில் மலர் சாகுபடி மூலம் கட்டாய லாபம் ஈட்டி வருகின்றனர். மலர்கள் இணை பயிராக தேர்வு செய்தவர்கள் நல்ல வரவினை பெற சாகுபடி உத்திகளை கையாள வேண்டும்.

வெறும் ஒன்று அல்லது இரண்டு மலர் பயிர்களை தொடர்ந்து சாகுபடி செய்பவர்கள் பலர் உண்டு. இன்னும் சிலர் பண்டிகை மற்றும் மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்கும் தருணம் மலர்களை தேர்வு செய்து பயிரிடுகின்றனர்.

மலர்களை பொதுவாக உதிரி மலர்கள் என்ற தலைப்பில் ரோஜா, முல்லை, பிச்சி, குண்டுமல்லி, சாமந்தி, செண்டுப்பூ, கனகாம்பரம், கேந்தி, டிசம்பர் பூ மற்றும் அரளி முதலியவற்றை பயிரிட்டு லாபம் ஈட்டலாம்.

- டாக்டர். பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர்
தேனி. 98420 07125

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement