Advertisement

பப்பாளியில் இலை சுருட்டு நோய்

பப்பாளியை பல்வேறு வகையான நோய்கள் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. அவற்றுள் மிகவும் முக்கியமானது இலை சுருட்டல் நோய். இது ஒருவகை வைரஸ் நச்சுயிரியினால் ஏற்படுகிறது.

அறிகுறிகள்



நோய் பாதிக்கப்பட்ட செடிகளில் இலைகள் சுருங்கியும், சுருண்டும், உருமாற்றத்துடன் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகளில் விளிம்புகள் கீழ் நோக்கியும், அடர்த்தியான நரம்புகளுடன் காணப்படும். செடிகளின் வளர்ச்சி குன்றி விடும். நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளில் பூக்கள் மற்றும் பழங்களில் வளர்ச்சி இருக்காது. இந்நோயானது வெள்ளை ஈக்கள் மூலம் பரவும்.

கட்டுப்பாடு



நோய் பரவுதலை தடுப்பதற்கு பாதிக்கப்பட்ட செடிகளை அப்புறப்பபடுத்த வேண்டும். தக்காளி மற்றும் புகையிலை செடிகளை பப்பாளியுடன் பயிரிடக்கூடாது. நோயை பரப்பும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த இமிடோகுளோபிரிட் மருந்தை ஒரு டாங்கிற்கு 5 மில்லி வீதம் கலந்து அவ்வப்போது தெளிக்க வேண்டும்.
மருந்து கரைசல் இலைகளில் நன்கு படிய சாண்டோவிட், பைட்டோவெட், ஸ்டிக்கால், அக்ரோவெட் போன்ற திரவ சோப்புகளில் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி பயன்படுத்தலாம்.

- முனைவர். இரா.விமலா
தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிபுத்துார்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement