Advertisement

ரவுத்திர வீணை

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு...

சத்தியம் பண்ணி சொல்றோம்... விவசாயத்தை விட்டா, எங்களுக்கு வேற தொழில் தெரியாது; நம்புங்க!கைலாசகிரி மலையில இருந்து, 2019, டிசம்பர் 25ம் தேதி கீழிறங்கின யானைக்கூட்டம், மலையை ஒட்டி இருந்த தக்காளி, வாழை, மிளகாய் தோட்டங்களை சாய்ச்சுட்டு, மறுநாள் குப்பராசபல்லி கிராமத்துல, சர்வே எண் 319ல இருந்த எங்க ரெண்டு ஏக்கர் வாழைத் தோட்டத்தையும் நாசம் பண்ணிடுச்சு.

வாழை அத்தனையும் குலை தள்ளியிருந்த நேரம். பொங்கல் பண்டிகையை ஒட்டி அறுவடை பண்ணினா லாபம் பார்த்து, கூட்டுறவு வங்கி கடனை அடைச்சிரலாம்னு இருந்தோம்; எல்லாம் போச்சு. இப்படியான சூழல்ல, எங்களுக்கு உதவுறதுதானே அரசோட கடமை!

சம்பவத்தன்னைக்கே ஆம்பூர் வனத்துறை அதிகாரி, கைலாசகிரி வி.ஏ.ஓ., ஆம்பூர் வட்டாட்சியர், வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேர்ல ஆய்வு பண்ணி, '190 மரங்கள் பாதிப்பு, சேத மதிப்பு 75 ஆயிரம் ரூபாய்'னு கணக்கெடுத்துட்டுப் போனாங்க.

ஆனா, இழப்பீடு சம்பந்தமா கைலாசகிரி வி.ஏ.ஓ.,கிட்டே விண்ணப்பிச்சு ரெண்டு மாசமாகியும், இன்னும் வனத்துறைக்கு எங்க விண்ணப்பம் போகலை.

'நானும் ஒரு விவசாயிதான்'னு அடிக்கடி சொல்றீங்களேய்யா... எங்க கஷ்டம் புரியுதுதானே?

- யானைகளால் வாழை தோட்டத்தை இழந்து வாடும் ரேவதி, ஆம்பூர், திருப்பத்துார் மாவட்டம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement