Advertisement

முதல்வர் பேசுகிறேன்

'தன்னுடைய பதற்றம் யானையிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது' எனும் யானைப் பாகனின் எச்சரிக்கை உணர்வு, தலைமை பொறுப்பை சுமக்கும் யாவருக்கும் உண்டு. அதிலும், நுாற்றுக்கணக்கான மாணவர்களை கொண்ட பள்ளியை நிர்வகிக்கும் ஒருவருக்கு கூடுதல் சுமைதான்!
'ஆனாலும்... கோவை, வேல் சர்வதேச பள்ளியின் முதல்வராக இச்சுமையை நான் சுகமாக உணர்கிறேன்!' - சு. பாரதி

நான் ஏன் முதல்வர்?முதலாளி என்பதன் அர்த்தம், 'முதல் தொழிலாளி'ன்னு சொல்வாங்க. அந்தவகையில, 'பள்ளி முதல்வர்' எனும் நானே எங்க பள்ளியின் முதல் ஆசிரியர்; முதல் மாணவி! இரண்டு தரப்பு நிறை குறைகளையும், அவங்கவங்க மனநிலையில இருந்து உள்வாங்கி முதல்வரா இருந்து திட்டமிடுறேன்.

ஆளுமை என்பது...'ஆணையிடும் பதவிக்கு செல்ல அடி பணிந்து செல்லும் தகுதி அவசியம்' - இதுதான் என் புரிதல். 'இதைச் செய்யுங்க... இப்படி செய்யுங்க'ன்னு மத்தவங்களுக்கு ஆணையிடுறதுக்கு முன்னாடி, நமக்கு அதைப்பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கணும்னு விரும்புறேன்; இதுதான் ஆளுமைக்கான கம்பீரம்ங்கிறது என் நம்பிக்கை.

இது என் பாணி!'முதல்வர் அறை'க்குள்ளேயே உட்கார்ந்திருந்தா தேடி வர்ற பணிகள்ல ஈடுபட முடியுமே தவிர, எனக்கான பணிகளை உணர்ந்து செய்ய முடியாது. அதான், ஆசிரியர்களைத் தேடி அவங்க அறைக்குப் போறேன்; வளர்ச்சி திட்டங்கள் பற்றி கலந்து பேசுறேன். வகுப்புல மாணவர்களை சந்திச்சு உரையாடுறேன். இதனாலதானோ என்னவோ, என் பணி இலகுவா இருக்கு; இனிமையாவும் இருக்கு!

பெற்றோரே... ஒரு நிமிஷம்!'தலை கவசம் அணிவோம்; சாலை விதிகளை மதிப்போம்; புறம் பேசுதல் தவிர்ப்போம்' இதெல்லாத்தையும் பள்ளியில நாங்க விதைச்சாலும், பிள்ளைகள் இதை சோதிச்சு பார்க்குறது பெற்றோர்கிட்டேதான்; ஒருவேளை நீங்க இதை பின்பற்றாத பட்சத்துல, நாங்க விதைச்ச விதை நிச்சயம் விருட்சமாகாது!

ஆசிரியர்களுக்கு ஒரு கேள்விஉங்க பிள்ளைகளுக்கு பாடம் எடுக்குற ஆசிரியர்கள் மேல உங்களுக்கு எதிர்பார்ப்புகள் அல்லது புகார்கள் இருக்கலாம். அதை வெளிப்படுத்துற சமயங்கள்ல, 'நம்மகிட்டே படிக்கிற மாணவர்களோட பெற்றோருக்கும் இப்படியான எதிர்பார்ப்பு அல்லது புகார் இருக்கும்தானே'ன்னு நீங்க நினைக்கிறதுண்டா?

நெஞ்சு பொறுக்குதில்லையே!'அதிரடி சலுகை; 50 சதவீத தள்ளுபடி' விளம்பரங்கள் பின்னால போற கூட்டத்தைப் பார்த்தா மனசு பதறுது; பின்னே... தேவையில்லா நேரத்துல வாங்கப்படுற பொருள் குப்பைக்கு சமம்தானே!

அந்த ஒருநாள்'கல்வி தரத்தில் இந்தியா முதலிடம்!' - இந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Baskaran - Thanjavur,இந்தியா

    தெளிவான சிந்தனையோட்டம். முதிர்ச்சியான அனுபவப் பகிர்வு. நெஞ்சைத் தொடும் அணுகுமுறை. உயர்ந்த இலட்சியத்தை நோக்கியப் பயணம். எல்லா வகையிலும் நீங்கள் முதல்வர்தான். வாழத்துக்கள். ச.பாஸ்கரன் தஞ்சை

  • கல்கி -

    சபாஷ் சகோதரி...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement