Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

* ஒரு திருட்டுப்பயலை பிடிச்சா அவனை தரையில உட்கார வைச்சு, தொப்பையும் தொப்பியுமா போஸ் கொடுக்கிற காவல் துறை அதிகாரிகள், குற்றம் செஞ்ச அரசு ஊழியர் கைதானா மட்டும் கைத்தறி துண்டு கொடுத்து அவங்க முகத்தை மறைச்சு கூட்டிட்டுப் போறது ஏன்?
முதல்வரே... மக்கள் சேவை பண்றதுக்கு மக்களோட வரிப்பணத்தை சம்பளமா வாங்குறவன் அரசு ஊழியன்னா, அவன் தப்பு பண்றப்போ மக்கள் மன்றத்துல அவனை நிறுத்தி வெளிப்படையா விசாரணை பண்றது தானே நியாயம்?

* குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்னு வீதி வீதியா, வீடு வீடா கையெழுத்து கேட்டு வந்த தலைவர்கிட்டே, 'டாஸ்மாக்கை உடனடியா மூட இப்படி ஒரு கையெழுத்து வேட்டையை எப்போ ஆரம்பிப்பீங்க'ன்னு நாம ஏன் கேட்கலை!

* 'நீயும் ஒரு குடிமகனே'ன்னு சொல்ற வாக்குச்சாவடியில மட்டும் வரிசையில நின்னு போஸ் கொடுக்குற சினிமாக்காரனும், அரசியல்வாதியும், அரசு அதிகாரியும், பணக்காரனும்... 'எல்லாரும் சமம்'னு சொல்ற கடவுளை தரிசிக்க மட்டும் முந்திட்டு போறது ஏன் தமிழா; குடமுழுக்கு விழாவுல தமிழுக்கு பெருமை சேர்க்கணும்னு விரும்புன நாம, நம்மால பணம் சம்பாதிக்கிற அத்தனை பேரையும் பெரிய ஆளுங்கன்னு நினைச்சு வழிவிட்டு ஒதுங்கி நின்னோமே... அது சரியா தமிழா?
ஈஸ்வரா... தானா திருந்த மாட்டானுங்க; நீதான் திருத்தணும்!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement