Advertisement

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 64; உபன்யாசங்கள் செய்து வருகிறேன். எல்லா விஷயங்களையும், 'டிவி'யில் காட்டி விடுவதால், உபன்யாசம் கேட்க கூட்டம் வருவதில்லை.
சிறுவர், சிறுமியருக்கு நீதி போதனை கதைகளைக் கூறிவந்த, தாத்தா, பாட்டிகள் முதியோர் இல்லம் சென்று விட்டனர். இதனால், அறம் போதிப்பதில் பெரிய வெற்றிடம் விழுந்திருந்தது.
மக்களுக்கு நன்மை, தீமைகளையும், நீதிநெறிகளையும் போதிக்கும் அமைப்பு ஒன்று தேவையாக உள்ளது.
அந்த தேவையை, சிறுவர்மலர் இதழ் சிறப்பாக நிறைவேற்றுகிறது என்றால் மிகையில்லை. சிறுவர்மலர் இதழில் படிக்கும் கருத்துக்களையும், உபன்யாசத்தின் போது சுவைபட சொல்கிறேன். கேட்போர் மிகவும் மகிழ்கின்றனர்.
மனிதனிடம் நீதியும், மதியும் உள்ளது; நிம்மதி எங்கே உள்ளது. யாருக்கு எப்படியோ, எனக்கு நிம்மதி தருகிறது சிறுவர்மலர். அதன் செயல் நீடுழி நிலைக்க பிரார்த்திக்கிறேன்.
- பி.ஆர்.காளீஸ்வரன், திண்டுக்கல்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement