Advertisement

நுங்கு பாயாசம்!

தேவையான பொருட்கள்:
நுங்கு - 1 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 1 கப்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் துாள் - சிறிதளவு.

செய்முறை:
பாலை நன்றாகக் காய்ச்சி, குளிர வைத்துக் கொள்ளவும். அதில், மசித்த நுங்கு மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையில், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் துாள் சேர்க்கவும்.
சுவையும், நறுமணமும் மிக்க, 'நுங்கு பாயாசம்' தயார். குளிர்ச்சியாக பரிமாறவும். கோடைக்கு இதமாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சுவைப்பர்.
- வை.சண்முகப்பிரியா, திருப்பூர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement