Advertisement

அசத்தும் வெஸ்பா

Share

டில்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடந்த 'ஆட்டோ எக்ஸ்போ'வில் நிறைய வெஸ்பா ஸ்கூட்டர்கள் அறிமுகமாகின. இதில், வெஸ்பா எலட்ரிக்கா மின் ஸ்கூட்டர் பெரிதும் கவர்ந்தது. 4.2 கிலோவாட் லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கி.மீ., துாரம் பயணிக்கலாம். சார்ஜ் செய்வதற்கு 4 மணிநேரம் தேவைப்படும். இந்த ஸ்கூட்டர் விரைவில் சந்தைக்கு வரும்.

வெஸ்பா ரெட், வெஸ்பா எஸ்எக்ஸ்எல், வெஸ்பா விஎக்ஸ்எல் மாடல்கள் பிஎஸ்-6 இன்ஜின் உடன் புதுப்பொலிவுடன் அறிமுகமாகின. தவிர, வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டிஸ் ஸ்கூட்டரும் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பிஎஸ்-6 தரத்திலான 150சிசி, மூன்று-வால்வு, பியூவல் இன்ஜெக்டட் இன்ஜின் 10.4 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க் திறனையும் தரும். வரும் மார்ச்சில் விற்பனைக்கு வருகிறது.

சிறப்பம்சம்:



* சிக்ஸ்டீஸ் என்ற பெயருக்கு ஏற்ப, 1960 போல புதுமையான கலவையில் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. வெள்ளை நிறம், கலக்கல் ஸ்டிரைப்ஸ், பக்கவாட்டு, முன்புற பேனல்கள் சிவப்பு, சக்கரங்கள் தங்க நிறத்தில் ஜொலிக்கின்றன.
* எல்இடி ஹெட்லைட்டை சுற்றிய பகுதிகள், கண்ணாடிகள் கருமை நிறத்தில் உள்ளன.
* பெரிய விண்ட்ஷீல்ட்
* டிஸ்க் பிரேக் உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
* டியூப்லஸ் டயர்
* செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்
* சீட்டுக்கு அடியில் பூட் லேம்ப், யூஎஸ்பி சார்ஜர்
எதிர்பார்க்கப்படும் விலை:
ரூ.1.30 லட்சம்(எக்ஸ்ஷோரூம்)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement