Advertisement

பெண்மை என் பெருமை

Share

ஒரு பேனாவும் காகிதமும் எடுத்து, 54 வயதில் ஒரு பெண் என்னென்ன செய்து கொண்டிருப்பார் என்பதை உத்தேசமாக பட்டியலிடுங்கள்.
'சீரியல் பார்ப்பார், பேரன் பேத்தியை பராமரிப்பார் என நீளும் உங்கள் பட்டியலில், 'யு - டியூப்' சேனல் நடத்துவார்' என்பது நிச்சயம் இடம் பெற்றிருக்காது! ஆனால், கரூரில் வசிக்கும் சரஸ்வதி, கடந்த நான்கு ஆண்டுகளாக இதைத்தான் செய்து வருகிறார். அவரது, 'சரசுஸ் சமையல்' - யு டியூப் சேனலை பின்பற்றுவோரின் எண்ணிக்கை, 1.22 லட்சம்!

சரஸ்வதிக்கு பிடித்த உணவு?



எனக்கு சாப்பிடுறதை விட பரிமாறுறது ரொம்ப பிடிக்கும்.

சமையலறை பெண்களுக்குரியதுதானே?



அதெப்படி... உணவு எல்லாருக்குமானதா இருக்கும்போது, சமையலறை மட்டும் பெண்களுக்குரியதா இருக்க முடியும். இந்த எண்ணம் ரொம்பவே தப்பு. இந்த சமையலறை, சரஸ்வதிக்கான களம் இல்லை; அடையாளம்! மன ஈடுபாட்டோட செய்ற எந்த ஒரு காரியமும் கம்பீரமான அடையாளத்தை தரும்ங்கிறது என் நம்பிக்கை. எனக்கு சமையல், கல்பனா சாவ்லாவுக்கு விண்வெளி, பி.வி.சிந்துவுக்கு விளையாட்டு; மனம் சொல்றதை செய்றவங்களுக்கு, நான் சொல்றது நல்லா புரியும்.

விரும்பினதை செய்ற சூழல் அமையுறது வரம் இல்லையா?



உண்மை தான்! வரமா கிடைச்ச அப்படி ஒரு சூழல்ல தான், இதையெல்லாம் நான் சந்தோஷமா ஆரம்பிச்சேன். ஆனா, எனக்கு எல்லாமுமா இருந்த என் பேத்தி ஆருத்ராவை இழந்த கணத்துல, 'இதுக்கு மேல என்ன வாழ்க்கை...'ன்னு ஒரு வெறுப்பு. அந்தசமயத்துல... என் சமையலையும், 'யு - டியூப்' நிகழ்ச்சிகளையும் பார்த்துட்டு, 'யூ ஆர் கிரேட் அம்மாச்சி'ன்னு அவ பாராட்டின நினைவுகள் தான், இந்த இடத்துக்கு என்னை நகர்த்திட்டு வந்தது.

'இழப்புகள் இயற்கை'ன்னு புரிஞ்சுக்கிட்டீங்க; அப்படித்தானே?



ஆமா... ஆனா, இந்த பக்குவம் வர நான் மட்டும் காரணம் இல்லை; 'மீண்டு வா... மீண்டு வா...'ன்னு சொல்லிட்டு மட்டும் இருக்காம, அதுக்குண்டான அத்தனை வழிகளையும் எனக்கு ஏற்படுத்தி தந்த என் கணவர், மகள், மருமகன், நண்பர்கள்னு எல்லாருமே காரணம்!

'கடந்து வந்துட்டேன்'னு சொல்றதுல உள்ள சிக்கல்?



நம்ம மக்கள்கிட்டே ஒரு புரிதல் உண்டு. இழப்புல இருந்து மீண்டு வந்துட்டா, அதை நாம மறந்துட்டோம்னு புரிஞ்சுக்கிறாங்க. 'பேத்தி இறந்து ஆறு மாசத்துக்குள்ளே மறுபடியும் யு - டியூப்புக்கு வந்தாச்சு பாரேன்'ன்னு என் காதுபடவே பேசினாங்க. அப்போ எனக்குள்ளே நான் சொல்லிக்கிட்டது இதைத்தான்...
'சரஸ்வதி... உன் உணர்வை நீ யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை!'

சரஸ்வதியின்புதுப்புது அர்த்தங்கள்



* உணவு - அன்பு
* உறவுகள் - வேர்கள்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement