Advertisement

உவர் நிலங்களை சீர்படுத்தி அதிக மகசூல்

களர், உவர் நிலங்களை சீர்திருத்தும் தொழில் நுட்பம் குறித்து, திருவள்ளூர் மாவட்டம் திரூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.சாந்தி கூறியதாவது:காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், களர், உவர் நிலங்கள் அதிகமாக உள்ளன.இது போன்ற நிலங்களில், உப்பு தன்மை அதிகமாக இருப்பதால், சாகுபடி செய்யப்படும் பயிரில், மகசூல் குறைகிறது.

இதை தவிர்க்க, வயலில் நல்ல நீரை தேக்கி வைத்து, பின், வெளியேற்ற வேண்டும். பின், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், தொழு உரம், தக்கை பூண்டு உள்ளிட்ட தழைச்சத்து உரங்களை போட வேண்டும்.'ஜிப்சம்' என, அழைக்கப்படும் கால்சியம் சல்பேட் உரங்களை, பாத்திகளில் பரப்பி, உழவு செய்ய வேண்டும். இதையடுத்து, களர் நிலங்களை தாங்கி வளரக்கூடிய, 'கோ - 43, திருச்சி - 1, திருச்சி - 3, பையூர்- - 1' ஆகிய ரக நெல்லை தேர்வு செய்து பயிரிடலாம்.ஒரு ஏக்கருக்கு, 100 கிலோ, 'அசோலா' பயிரிட்டு, பாசி படர்வதை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்வதால், களர் மற்றும் உவர் நிலங்களில், நல்ல மகசூல் பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

தொடர்புக்கு: 94444 78234

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement