Advertisement

குறைந்த செலவில் மீன் படகு தயாரிக்கலாம்

குறைந்த செலவில், மீன் பிடிக்கும் படகு தயாரிப்பு குறித்து, தென்னேரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜி.ராஜா கூறியதாவது:மீன் பிடிக்கும் தொழிலில், படகு மற்றும் வலைக்கு தான் அதிக பணம் செலவாகும். ஏரிகளில் மீன் பிடிப்பதற்கு, கட்டுமரம் இருந்தால் போதும், எளிதாக மீன் பிடித்து, கரை திரும்பலாம்.

இல்லையெனில், பைபர் படகு வாங்கி உபயோகப்படுத்தலாம். ஒரு பைபர் படகு வாங்குவதற்கு, 20 ஆயிரம் ரூபாய் ஆகும். ஆனால், பி.வி.சி., பைப் வைத்து, 8,000 ரூபாயில் படகு தயாரிக்கலாம். கட்டுமர வடிவில், படகு தயாரித்து, மீன் பிடிக்கலாம்.

சிறிய ஏரிகளை ஏலம் எடுக்கும் மீனவர்களுக்கு, படகு உபயோகமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 95141 54975

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement