Advertisement

கலப்பின மாடுகளில் வருவாய் ஈட்டலாம்

கலப்பின மாடு வளர்ப்பு குறித்து, காரை கிராமத்தைச் சேர்ந்த இளங்கலை கணினி பட்டதாரி விவசாயி ஆர்.சதீஷ் கூறியதாவது:சிந்து மற்றும் ஜெர்சி ரக கலப்பின மாடுகளை, கொட்டகை அமைத்து வளர்த்து வருகிறேன்.தீவனம் மற்றும் பராமரிப்பு முறையாக கையாளுவதால், பால் உற்பத்தி நன்றாக இருக்கிறது.

என் மாட்டு பண்ணையில், 12 மாடுகள் உள்ளன. மாடு வளர்ப்பு பொறுத்தவரை, அதிக பால் கறக்கும் மாடுகளை தேர்வு செய்து வளர்க்க வேண்டும். அப்போது தான், கூடுதல் பால் உற்பத்தி மற்றும் தரமான கன்றுகள் கிடைக்கும்.ஒரு மாதத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது. தீவனம் மற்றும் பராமரிப்பு செலவினங்கள் போக, மாதம், 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. ஓராண்டுக்கு, 3 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம். கூடுதல் மாடுகள் வளர்த்தால், இரட்டிப்பு வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: 80727 79282

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement