Advertisement

பிறந்த கன்றை பராமரிக்க யோசனை!

இளங்கன்று பராமரிப்பு குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய உதவி பேராசிரியர் ஆர்.கோபி கூறியதாவது:கன்று பிறந்தவுடன், கறவை மாட்டின் இடுப்பு மற்றும் பால் காம்புகளை வெதுவெதுப்பான வெந்நீரில் சுத்தப்படுத்த வேண்டும். கன்றுக்கு, மூக்கு துவாரம், மெல்லிய சவ்வால் மூடப்பட்டிருக்கும். இயல்பாகவே, கறவை மாடு, தன் நாக்கின் மூலமாக, கன்றின் மீது இருக்கும் சளியை சுத்தம் செய்துவிடும்.

சில சமயங்களில், கன்று ஈன்ற சோர்வு மற்றும் வேறு ஏதேனும் ஒரு காரணங்களால், கறவை மாடு, கன்றை சுத்தம் செய்ய முடியாது. அச்சமயத்தில், சளியால் மூச்சு திணறல் ஏற்பட்டு, கன்று குட்டி இறக்க நேரிடும்.

இதை தவிர்க்க, கன்றை தலைகீழாகப் பிடித்து, பின்னங் கால்களை ஒன்று சேர்த்து, தும்பல் வரும்படி சுற்ற வேண்டும். பின், சீம்பாலை கன்றுக்கு ஊட்ட வேண்டும். குறைந்தது, மூன்று நாட்கள் வரை, சீம்பாலை கொடுக்க வேண்டும்; அதிகமாக தரக்கூடாது.மேலும், கொட்டகையில் ஈரமில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அப்போது தான், கால் குழம்பு நோய் வராமல் தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: 75300 52315

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement