Advertisement

அழகு மட்டும் போதுமா?

அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும், மடித்து விரிக்கக்கூடிய, போல்டபிள் போன்கள் தயாரிப்பில் மும்முரம் காட்டிக்கொண்டிருக்க, 'சயோமி' மட்டும், பழைய விஷயத்தை கையில் எடுத்து, மிரட்டும் வேலையில் இறங்கி உள்ளது.

சயோமி நிறுவனம் புதிதாக, 'மி மிக்ஸ் ஆல்பா' எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது.இதன் சிறப்பை சொல்ல வேண்டும் என்றால், அனைத்து பக்கங்களுமே டிஸ்பிளேவாக மாற்றப்பட்டிருப்பதுதான். முன், பின், பக்கவாட்டு பகுதிகள்அனைத்துமே டிஸ்பிளே தான்.

இதர சிறப்பம்சங்கள்:
* ஸ்நாப்டிராகன் 855 சிப்
* 5ஜி மோடம்
* 4,000 எம்.ஏ.எச்., பேட்டரி
* 40 வாட் பாஸ்ட் சார்ஜ்ஜிங்
* 12 ஜி.பி.ரேம்
* 512 ஜிபி நினைவகம்

இதில் முக்கியமான விஷயம், இந்த போன், இப்போதைக்கு விற்பனைக்கு இல்லை என்பது தான். அப்படியே விலைக்கு வந்தாலும், அதன் விலை, 2.5 லட்சம் ரூபாயாக இருக்கும் என்கின்றனர்.

விமர்சகர்களைப் பொறுத்தவரை, இந்த போன் பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால், இதனால் பெரிதாக எந்த பயனும் இல்லை. போல்டபிள் என்றாலாவது, திரையை பெரிதாக்கி வீடியோ பார்ப்பதில் ஒரு வசதி இருக்கும். இதில் அப்படி எதுவும் கிடையாது. அழகுக்கு, இவ்வளவு விலை கொடுத்து வாங்குவது சிரமம். அதனால், இது விற்பனைக்கு வராது என்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement