Advertisement

இதயத்திருடி

'அம்மா' - எத்தனை கதைகளில், கவிதைகளில், பாடல்களில், சினிமாக்களில் ஏற்றப்பட்ட பிம்பம். ஆனால், எவ்வளவு பொய்மை; எவ்வளவு ஈவிரக்கமின்மை! அவள் மனம் விசும்பியது.

ஒரு ப்ளாஷ்பேக்.'நல்ல நல்ல இடங்கள்ல இருந்து லதாவை கேட்டு வர்றாங்க. ஆனா...' - அம்மா.
தன் கைப்பையை திறந்து சிவப்பு கல் இலையும், பூவும் விரிந்த நெக்லஸை எடுத்து நீட்டினாள் சுதா.'உன் நகை எங்கேன்னு கேட்டா என்னடி செய்வே?''அவர் தர்ற பணத்துல இருந்து வாங்கிக்கிறேன்!

'ஒவ்வொரு முறை தாய் வீட்டிற்கு போகும் போதும், தனக்கு போட்டதை எல்லாம் கொடுத்தாள் சுதா. லதாவிற்கும், சங்கீதாவிற்கும் திருமணம் முடிந்தது. தம்பி தலையெடுத்தான். அம்மா கழுத்து செயினில் கனம் ஏறியது.

ஓர் இரவில், கணவனிடம் இதுவரை நடந்ததைச் சொன்னாள்; 'இதுல ஒண்ணும் குத்தமில்ல; எனக்கு நீதான் பெருசு' என்றான் காதலோடு!கணவனிடம் சொன்னதை காலையில் அம்மாவிடம் தொலைபேசினாள்.

'எங்களை கேவலப்படுத்திட்டே; இனி நீ எனக்கு மகளுமில்ல; நான் ஒன்னப் பெத்தவளுமில்ல!' - வெடித்தாள் அம்மா.'அம்மா - எவ்வளவு பொய்மை; எவ்வளவு ஈவிரக்கமின்மை!' - சுதாவின் மனம் விசும்பியது.

படைப்பு: முறிவு ('வயலட் ஜன்னல்' சிறுகதை தொகுப்பு)
எழுதியவர்: உமா மகேஸ்வரி
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement