Advertisement

பிளாபங்க்ட்

இப்போதெல்லாம் சந்தையில் எக்கச்சக்கமாக, ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்கள் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட, அனைத்து முன்னணி பிராண்டுகளுமே, ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன.

அந்த வரிசையில், தற்போது, பிளாபங்க்ட் நிறுவனமும் சேர்ந்துள்ளது. இந்நிறுவனம், அதன் இரண்டாவது, ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. 'பிளாபங்க்ட் பி.டி.டபுள்யு., புரோ' எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயர்போன், புளுடூத் 5.0 வசதியுடன், குவால்காம் ஆப்ட் எக்ஸ் புளுடூத் கோடக் மென்பொருள் சப்போர்ட் செய்வதாகவும் உள்ளது.

இதில் இரண்டு மைக்ரோபோன் செட் அப் உள்ளன. ஒன்று, அழைப்புகளை ஏற்பதற்காகவும், அடுத்தது புறச் சத்தங்களை நீக்குவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளன.இந்த இயர்போன், நீர்புகாதவாறு தயாரிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இதன் பேட்டரி திறன், 36 மணி நேரம் தாங்கும். கூகுள் அசிஸ்டென்ட் உள்ளிட்டவற்றின் மூலமாக, குரல் வழி உத்தரவுகளையும் பிறப்பிக்கலாம்.விலை, ரூ.6,999

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement