Advertisement

கேனன் ரோபோட்டிக் சிஸ்டம்

'கேனன்' நிறுவனம், புதிதாக, 'ரோபோட்டிக் கேமரா சிஸ்டம்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தொழில்முறை புகைப்படக் கலைஞர்களை மனதில் கொண்டு, இந்த சிஸ்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

'சி.ஆர்.எஸ்., 700 ஆர்' எனும் இந்த ரோபோட்டிக் சிஸ்டம் உதவியுடன், புகைப்படக் கலைஞர்கள், தொலைவிலிருந்தே கேமரா மற்றும் லென்ஸை இயக்கலாம்; கட்டுப்படுத்தலாம்.இதற்காக, சி.ஆர்.-ஏ., 100 எனும், கேமரா ரிமோட் அப்ளிகேஷன் மூலம், கம்ப்யூட்டர் உதவியுடன், கேமராக்களை தொலைவிலிருந்து இயக்கலாம்.

ஒரே நபர், இந்த வசதியை பயன்படுத்தி, பல்வேறு இடங்களிலுள்ள கேமராக்களை, ஒரே சமயத்திலோ அல்லது வெவ்வேறு சமயத்திலோ தொலைவிலிருந்தோ இயக்கலாம்.பிப்ரவரி மாத மத்தியிலிருந்து, இந்த கேமரா சிஸ்டம் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement