Advertisement

மாண்புமிகு மாணவி

புதுச்சேரி தடகள சங்க போட்டி, பள்ளி கல்வித்துறை மண்டல சாம்பியன்ஷிப் போட்டி இரண்டிலும் பதக்கம் வென்றவர் இந்த சஹானா. தேங்காய்த்திட்டு, ஆச்சாரியா பால சிக்சா மந்திர் பள்ளியின், 9ம் வகுப்பு மாணவியான இவர், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான குண்டு எறிதலில், தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்திருப்பவர்.

* உடலையும், மனதையும் ஒருங்கிணைச்சு விளையாட வேண்டிய விளையாட்டு இது; கொஞ்சம் கவனம் சிதறினாலும், உடல் காயமாயிடும். இதுக்காக, தினசரி மூணு மணி நேரம் உடற்பயிற்சி; மனசுக்கு தியானம்னு அன்றாடம் என்னை வலுப்படுத்திக்கிறேன்; 'ஆழ்ந்த துாக்கம் கூட ஒருவகையான தியானம்'ங்கிறது என் நம்பிக்கை!

* களத்துல போட்டியாளர்களைப் பார்த்து பதறுற பழக்கம் எனக்கு கிடையாது; ஆனா, 'உன் திறமை எல்லாத்தையும் ஜெயிக்கும்'னு எனக்கு நானே சொல்லிக்குவேன்; இந்த தன்னம்பிக்கை தான், என் வெற்றிக்கான சூட்சமம்! இந்த குணம், படிப்புலேயும் என்னை மெருகேத்தியிருக்கு; நான்தான் கிளாஸ் லீடர்.

* பென்சில் ஓவியங்கள் தீட்டுறதும், புதிர், விடுகதைகள்ல மூழ்குறதும் எனக்கு ரொம்ப பிடிக்கும். 'அறிவையும், ஆரோக்கியத்தையும் அலைபேசி திருடும்; மைதானமோ கூர் தீட்டும்'னு அனுபவத்துல உணர்ந்தவ நான்!

எங்கள் சஹானா!
'தயக்கம்'ங்கிற தீய குணத்தை வேட்டையாடுற வேங்கை சஹானா; அவளோட பதக்க வேட்டைகள் தொடரும்!
- ந.சிவகாமி, ஆசிரியை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement