Advertisement

சீதா பழத்தில் சிறப்பான வருவாய்

சீதா பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:ஆண்டு முழுவதும் வருவாய் கிடைக்கும் வகையில், டிராகன் பழம், இளம் சிவப்பு கொய்யா, வாட்டர் ஆப்பிள், அன்னாசி, இலந்தை பழம் ஆகிய பலவித பழங்களை சாகுபடி செய்துள்ளேன்.அந்த வரிசையில், சீதா பழச் செடிகளும் சாகுபடி செய்துள்ளேன்.

இது, மலை பகுதி மற்றும் வறட்சி நிலவும் பூமிகளில் சாகுபடி செய்யலாம்.குறைந்த நீர் பாசனம் இருந்தால் போதுமானது. மேலும், அதிக செலவு இல்லாத ஒரு பணப்பயிராகும். இது, ஆந்திரா மாநிலத்தில் அதிகமாக பயிரிடப்படுகிறது.

அங்கிருந்து, சில செடிகளை வாங்கி வந்து, வரப்பு பயிராக நட்டுள்ளேன்.ஒரு ஏக்கரில், இடைவெளி விட்டு செடிகளை நடவு செய்தால், 4 டன் வரை மகசூல் பெறலாம். கிலோ, 90 ரூபாய்க்கு விற்றால்கூட, 3.60 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

தொடர்புக்கு: 93829 61000

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ramachandran - coimbatore,இந்தியா

    எங்கள் வீட்டில் சீதா பழம் கறுத்து போகிறது, நல்ல டிப்ஸ் தேவை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement