Advertisement

ரோபோ அறிமுகம்

அமெரிக்காவில் இம்மாதம், 7-10ம் தேதிகளில் நடைபெற்ற, 'கேட்ஜெட்' உலகின் திருவிழாவான, நுகர்வோர் மின்னணு கண்காட்சியில், பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் புதுமையான தயாரிப்புகளை அறிமுகம் செய்தன.

'சாம்சங்' நிறுவனம், கண்காட்சியில் அறிமுகப்படுத்தியவற்றில் அதிக கவனம் ஈர்த்தது, 'பாலி' எனும் உருண்டு வரும், 'ரோபோ!'

கிட்டத்தட்ட ஒரு பந்தைப்போலவே இருக்கும் இது, செயற்கை நுண்ணறிவு கொண்ட சாதனமாகும். நம் குரல் அழைப்பை ஏற்று, நம்முடன் வரும்.

வீட்டுக்குள் நம்முடன் உருண்டு வரும் இது, நம் கட்டளைகளை நொடியில் நிறைவேற்றும். பாட்டைப் போடு, லைட்டைப் போடு, 'டிவி'யைப் போடு என நம் எல்லா உத்தரவுகளையும் செயல்படுத்தும்.

மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் இந்த பாலி, எப்போது சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து, சாம்சங் வாய் திறக்கவில்லை. ஆனால், கண்காட்சியில் பங்கேற்ற அனைவரும் இதைப் பார்த்து, திறந்த வாயை மூடவில்லை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement