Advertisement

ஓல்டு இஸ் கோல்டு பேஷன் டிசைனர்

ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஆடைகளை இன்று 'ஓல்டு இஸ் கோல்டு' என்ற பெயரில் பெண்கள் விரும்பி அணிகிறார்கள். இதற்காக பேஷன் டிசைனர்கள் பலர் தங்கள் கற்பனையை பட்டை தீட்டி புது வடிவங்களில் ஆடைகளை உருவாக்குகிறார்கள். மதுரை தமிழ்ச்சங்கம் ரோடு பேஷன் டிசைனர் பானுமதி கூறியதாவது:

30 ஆண்டுகளாக தையல் துறையில் இருக்கிறேன். காலத்திற்கு ஏற்ப நானும், என் தையல் திறமையையும் மாற்றி வருகிறேன். பெண்கள் மறந்த கவுன், பிராக், லாங் மிடி, பட்டு பாவாடை சட்டை போன்ற ஆடைகளை வடிவமைக்கிறேன்.

இணையத்தில் இருக்கும் பிளவுஸ் உள்ளிட்ட ஆடைகளின் மாடல்களை கொண்டு வந்தால் அப்படியே தைத்து தருவேன். ஆடைகளுக்கு மேட்சாக ஆரி, எம்பிராய்டரி கூட செய்கிறேன். அந்த கால சினிமாக்களில் சரோஜாதேவி, தேவிகா, கே.ஆர்.விஜயா போன்ற நடிகைகள் அணிந்த ஆடைகளும் வடிவமைக்கிறேன்.

இன்றைய ஹீரோயின்கள் அணியும் ஆடைகளையும் என்னால் வடிவமைக்க முடியும். நான் கற்ற இக்கலையை பெண்களுக்கு கற்றுக்கொடுக்க குறுகிய கால தையல் பயிற்சி வகுப்பும் நடத்துகிறேன்'' என்றார்.

- பேஷன் ஆடைகளுக்கு 96007 65886.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement