Advertisement

'ரேஸர்' சாதனங்கள் அறிமுகம்

Share

அமெரிக்காவில் இம்மாதம், 7-10ம் தேதிகளில் நடைபெற்ற, 'கேட்ஜெட்' உலகின் திருவிழாவான, நுகர்வோர் மின்னணு கண்காட்சியில், பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் புதுமையான தயாரிப்புகளை அறிமுகம் செய்தன.

பிரபல, 'ரேஸர்' நிறுவனம், இக்கண்காட்சியில் பல சாதனங்களை அறிமுகம் செய்திருந்தாலும், அதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவை மூன்று அறிமுகங்கள்:
ரேஸர் கிஷி கேம்பேடு: 'நின்டெண்டோ ஸ்விட்ச் ஜாய் கான் கன்ட்டோரலர்ஸ்' பாதிப்பில் உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இருப்பினும், ரேஸரின் கைவண்ணத்துக்கு எந்த பங்கமும் இல்லை. இந்த சாதனத்தை தனியாக, 'சார்ஜ்' செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த கன்ட்ரோலருடன் இணைக்கப்பட்டிருக்கும் போனிலிருந்தே, தேவையான சார்ஜை எடுத்துக் கொள்ளும். அதே போல், இதிலிருந்தும் போனுக்கு சார்ஜை ஏற்றிக் கொள்ளலாம்.
அடுத்து, பல வகை, 'ஆண்ட்ராய்டு' மற்றும் ஐ.ஓ.எஸ்., போன்களை இது சப்போர்ட் செய்கிறது.
விலை பற்றி இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

ரேஸர் சிலா 5ஜி ரூட்டர்: இந்த, '5ஜி' ஹோம் ரூட்டரும், 'வீடியோ கேம்ஸ்' விளையாடுபவர்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி இதனுள்ளேயே இணைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்சோல் அல்லது கம்ப்யூட்டர் என, எதன் மூலமாக விளையாடுகிறோமோ, அதற்கேற்ப மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

ரேஸர் எரேஸிங் சிமுலேட்டர்: வாகனங்களை ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கும் இடங்களில், முதலில் ரோட்டுக்கு கூட்டி கொண்டு போகாமல், சிமுலேட்டரில் உட்கார வைத்து பயிற்சி அளிப்பர். இந்த ரேஸர் சிமுலேட்டர் அது போன்ற ஒன்று தான்.

வீடியோ கேமை, ரியலாக விளையாடுவது போன்ற உணர்வை, இந்த சிமுலேட்டர் ஏற்படுத்தும். 'ஹைட்ராலிக்' முறையில் இயங்கும் இதை, நம் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம். 'ஸ்டீயரிங், பெடல், பிரேக்' எல்லாம், 'மேனுவல் கன்ட்ரோல்' தான்.
விலை குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement